states

img

தமிழ்நாட்டிலும் கே போன்

கேரளத்தின் முன்மாதிரியான கே போன் குறித்து தெரிந்துகொள்ள தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜன் செவ்வாயன்று திருவனந்தபுரம் வந்தார். சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து கே-போன் திட்ட முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் என்ற பெயரில் தமிழ்நாடு கே போன் மாதிரி செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு ஐ.டி. துறைச் செயலாளர் ஜே குமரகுரு பரன், டான்பினெட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் ஏ.ஜான் லூயிஸ், கேரள ஐ.டி. செயலாளர் டாக்டர். ரத்தன்  யு கேல்கர், கே போன் நிர்வாக இயக்குநர் டாக்டர் சந்தோஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.