states

img

கேரளாவில் பாலின பாகுபாடற்ற சீருடை அறிமுகம்!

கேரளாவில் பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கோழிக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பாகுபாடற்ற சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய நிதி ஆயோக் ஆய்வு முடிவுகளின் படி கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தொடர்ந்து கேரள முதலிடத்தை தக்க வைத்துள்ளது என தெரிவிக்கிறது. மேலும், கொரோனா காலத்தில் இந்தியா முழுவதும் ஆன்லைன் கல்வியே நடைமுறையில் இருந்தது. அதில் 91 சதவிகித மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி வழங்கி கேரள மாநிலம் முதலிடம் வகித்தது என்ற புள்ளிவிபரங்களும் வெளியாகியது.

தற்போது, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாலின பாகுபாடற்ற சீருடை அறிமுகப்படுத்தியுள்ளது,

ஏற்கனவே, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள  ஒரு பள்ளியில் பாலின பாகுபாடற்ற சீரூடை அறிமுகப்படுத்தியதை வரவேற்று தற்போது கோழிக்கோட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி இந்த சீரூடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,

பாலின பாகுபாடு குறித்து மாநிலம் முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் பின்னணியில் பிளஸ்-ஒன் மாணவர்களுக்கு ஒரே மாதியான சீரூடை என்ற யோசனையை பள்ளியின் ஆசிரியர்கள் முதலில் முன்மொழிந்துள்ளனர்.பிற்பாடு பெற்றோர், ஆசிரியர் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவிகள் தெரிவிக்கையில், இந்த சீரூடை மாற்றத்தை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். குறிப்பாக விளையாட்டு மற்றும் கலை ரீதியான நடவடிக்கைகளின் போது சட்டையும், கால் சட்டையும் எங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவர் ஷைபு கூறுகையில், புதிய சீருடையை அறிமுகப்படுத்துவதில் பள்ளி நிர்வாகவும், பெற்றோர்களும் நெகிழ்ச்சியுடன் இருந்தனர்.மாணவர்கள் தங்கள் விருப்பப்படி முழு கை அல்லது அரைக் கையை ஆடையை தேர்வு செய்யலாம். நாங்கள் தெரிவிக்க விரும்புவது இரு பாலினத்தரிடையே உள்ள பாகுபாடுள்ள சீருடையை அகற்றி பாகுபாடற்ற சீருடையை அறிமுகப்படுத்துவதே என தெரிவித்தார்.

கல்வியில் சிறந்து விளங்கும் கேரள மாநிலம், தற்போது மாணவர்களுக்கு பாகுபாடற்ற சீருடையை அறிமுகப்படுத்தி இந்தியாவிலேயே முன்மாதியாக கேரள விளங்குகிறது என பலராலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.                                                         

;