states

img

கேரள அமைச்சர் சஜி செரியன் தலையீடு... 24 தமிழக, கேரள மீனவர்கள் கத்தாரில் விடுவிப்பு....

திருவனந்தபுரம்:
ஈரானில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்று எல்லை தாண்டியதாக கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் கத்தார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கேரள முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தில்லியில் உள்ள நோர்கா அலுவலகம் மூலம் மீன்வளத்துறை அமைச்சர் சஜி செரியன் உடனடியாக தலையிட்டு 20 தமிழக மீனவர்கள், 4 மலையாளிகள் உள்ளிட்ட 24 பேரையும் விடுவிக்க உதவியுள்ளார்.

24 மீனவர்களும் தற்போது கத்தார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக ஈரானுக்குத் திரும்பி யுள்ளனர். அங்கு அவர்கள் மீன்பிடி தொழிலில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மீனவர் சங்கங்களின் வேண்டுகோளின் பேரில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஜி செரியனை உடனடியாக தலையிட வைத்தார்.மார்ச் 22 அன்று ஈரானைச் சேர்ந்த ஹாசனுக்குச் சொந்தமான அசின் மற்றும் யாகூப் ஆகிய இரண்டு படகுகளில் அவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.  அப்போது அத்துமீறிச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் மார்ச் 25 ஆம் தேதி கத்தாரின் ராசா லபான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஏப்ரல் 19 ஆம் தேதி 50,000 கத்தார் ரியால்கள் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

;