states

img

கேரள அரசு ஊழியர் சங்கத்தின் வைர விழா மாநாடு

மாநாட்டின் நிறைவில் பங்கேற்றார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், மே 31 - கேரள மாநில அரசு ஊழியர்கள் சங்க வைரவிழா  மாநாடு மே 27 அன்று துவங்கி 30 வரை திருவனந்த புரத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. ஸி.ஹெச்.அசோகன் நகரில் (ஜிம்மி ஜார்ஜ் உள்விளையாட்டரங்கம், திருவனந்த புரம்) நடைபெற்ற இம்மாநாட்டில் சங்கப் பொதுச் செய லாளர் எம்.ஜி.அஜித்குமார் வேலை அறிக்கையை முன்வைத்தார்.  அறிக்கையின்மீது நடைபெற்ற விவா தத்தில் கே.மணிகண்டன்(காசர்கோடு), கே.ஷீபா (கண்ணூ ர்), பி.லீலாமணி, டி.சேதுமாதவன் (வயநாடு), பி.கே. ஹனீஷ்  (கோழிக்கோடு), டி.ரூபி ஸஜ்னா, எம்.பி. வல்சராஜ் (மலப்புறம்), எஸ்.கிருஷ்ணனுண்ணி (பாலக்காடு), வி.ஏ.ஷீபா, எம்.பி.ஸலேஷ், (திருச்சூர்), லின்ஸி வர்கீஸ் (எர்ணாகுளம்), எம்.எம்.ரஸீனா, கே.வி.ரவீந்திரநாத் (இடுக்கி), இ.எஸ்.ஸியாத் (கோட்டயம்), பி.பிந்து, மோளி சந்தோஷ் (ஆலப்புழா), ஜி.பிந்து, தம்பி  (பத்தனம்திட்டா), கே.ஸி.ரென்ஸிமோள், பி.என்.மனோஜ் (கொல்லம்), பி.பத்மம்(திருவனந்தபுரம் வடக்கு), ஏ.அசோக் (திருவனந்தபுரம் தெற்கு) ஆகியோர் பங்கேற்ற னர். விவாதங்களுக்கு பொதுச்செயலாளர் தொகுப்புரை வழங்கினார். தொடர்ந்து மாநாட்டு அறிக்கை முழுமன தாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அறிஞர்கள் சொற்பொழிவு

மாநாட்டில் வழக்கறிஞர் வி.கே.பிரசாத் எம்.எல்.ஏ,  டாக்டர். டி.எம்.தாமஸ் ஐசக், கே.என்.பாலகோபால், இ.பி.ஜெயராஜன், எம்.ஏ.பேபி, ஆதவன் தீட்சண்யா, சுவாமி சந்துபானந்கிரி, எளமரம் கரீம், டாக்டர் விஜய் பிரசாத், வீணா ஜார்ஜ், வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், சந்தோஷ் கீழாற்றூர், பி.கே.ஸ்ரீமதி டீச்சர், ஐசி கோஷ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்கள்.

நிர்வாகிகள் தேர்வு 

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக எம்.வி.சசீதரன், பொதுச் செயலாள ராக எம்.ஏ.அஜித்குமார், பொருளாளராக வி.கே.ஷீஜா  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவர் களாக டி.பி.உஷா, பி.அனில் குமார் (கொல்லம்), பி.அனில்  குமார் (திருவனந்தபுரம் தெற்கு) ஆகியோரும் துணைச் செயலாளர்களாக ஆர்.ஸாஜன், பி.பி.சந்தோஷ், பி.சுரேஷ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிரம்மாண்ட பொதுக்கூட்டம் 

மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலு மிருந்து சுமார் முப்பதாயிரம் அரசு ஊழியர்கள் மாநாட்டுப் பேரணியில் கலந்து கொண்டார்கள். மாநில குடிமைப் பணிகள் சேவையில் மிகவும் வலுவான இயக்கமாக கேரள அரசு ஊழியர்கள் சங்கத்தின் வலிமையைப் பறைசாற்றுவதாக பேரணி அமைந்தது. பல்கலைக்கழக வளாகத்தின் முன்பிருந்து செவ்வாயன்று பிற்பகல் 3 மணிக்குத் துவங்கிய பேரணி புத்தரிக்கண்டம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கோடியேறி பால கிருஷ்ணன் நகரை மாலை 5 மணிக்கு வந்தடைந்தது.  புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும்  பொதுக்கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கிவைத்தார். பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன், நீர்வளத்துறை அமைச்சர் ரோஷ்  அகஸ்டின், மின்சாரத்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி, வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், போக்கு வரத்துத்துறை அமைச்சர் ஆன்டனி ராஜு,  கடனப்பள்ளி  ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.


 

;