நிதி நெருக்கடிக்கு மத்தியில் கேரள அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்ப ட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டுகளில் மாநில அரசின் சிறந்த தலையீடு பொருளா தார ரீதியில் கேரளாவை ஸ்திரமான நிலை க்கு இட்டுச் சென்றுள்ளது. மாநில உள்நாட்டு உற்பத்தி 6.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும் 71,000 கோடி ரூபாய் தனித்துவ மான சுய வருவாய் ஈட்ட முடிந்தது.
வருவாய் பற்றாக்குறையும் நிதிப் பற்றாக்குறையும் அனுமதிக்கப்பட்ட வரம்பு களுக்குள் சரிசெய்யப்பட வேண்டும். நெருக்கடியான காலங்களில் நம்பிக்கை யை உயர்த்தும் பின்னணியுடன் பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. எனவே, இந்த பட்ஜெட் கேரளத்தின் எதிர்காலத்தை ‘நடைமுறை அணுகுமுறையிலிருந்து’ வடிவமைக்கும் ஆவணமாக மாறுகிறது.
விழிஞ்ஞம் துறைமுகம் கேரளத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் அடித்தள மாக விளங்குகிறது. துறைமுகம் தொடர்பான பெரும் மேம்பாடுகளை கொண்டு வரக்கூடிய பல்வேறு திட்டங்களை வரவு - செலவுத் திட்டம் முன்மொழிகிறது. உயர்கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகள் கேர ளத்திற்கு பெரும் ஆற்றலை வழங்குகின்றன. மேலும் வளர்ச்சியை விரைவுபடுத்து வதற்கான சிறப்புத் தூண்களாக அவை கருதப்படுகின்றன. கேரளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட சிறந்த சுகாதார மையங்களுக்கு நிபுணத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளில் இருந்து மக்களை ஈர்க்கும் பட்ஜெட் முன்மொழிவு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
தனியார், கூட்டுறவு மற்றும் பொதுத் துறைகளின் ஒத்துழைப்புடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் முத லீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த மலையாளிகளின் செல்வம் மற்றும் நிபுணத்துவத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தவும் இது முன் மொழிகிறது. ஒன்றிய அரசின் பொருளாதார நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், ‘பிளான் பி’ திட்டம் நாட்டின் முன் சரியான செய்தியை முன்வைக்கிறது. இதன் மூலம் நெருக்கடியான காலத்திலும் அரசு முன்னே றாமல் இருக்க முடியாது என்ற உறுதியான நிலைபாட்டை பட்ஜெட் முன் வைக்கிறது.
இந்நிலையில் கூட மக்களுக்கு அதிக சுமையை கொடுக்காமல் 1,067 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. வீட்டுவசதித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டை இலக்கு வைப்பது தேக்க நிலையைப் போக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத் துறைகளைத் தூண்டவும் உதவும். பொதுநல நடவடிக்கைகளில் எந்த சமரசமும் செய்யாமல், கேரளாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பட்ஜெட் இலக்காகக் கொண்டுள்ளது. வரவுசெலவுத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது குறுகிய கால ஒதுக்கீட்டையும் எதிர்கால வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கிறது. இதுவே, 2047 உலகை மட்டுமே கனவு காணும் நிர்மலா சீதாராம னின் பட்ஜெட்டில் இருந்து கே.என்.பால கோபாலின் பட்ஜெட்டை தனித்து நிறுத்து கிறது.
- ஜார்ஜ் ஜோசப்
கட்டுரையாளர் : ஒரு மூத்த நிதி பத்திரிகையாளர்