states

img

5 முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை

திருவனந்தபுரம், ஜூன் 25- கேரள மக்களை உணவு நெருக்க டிக்கு உள்ளாக்காது அன்னமூட்டிய, கேரள பொதுச் சந்தையில் அன்றாடத் தேவைகளின் விலையைக் கட்டுப் படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (சப்ளைகோ) ஐம்பது ஆண்டுகால முன்னேற்றத்தை நிறைவு செய்து பொன்விழா காண்கிறது. 

இதற்கான கொண்டாட்டத்தின் பகுதியாக, கேரள மாநில அரசு ஒரு வருடத்திற்கு விரிவான திட்டங்களை செயல்படுத்துகிறது.

1974 ஆம் ஆண்டில், கிராமப் புறம், நகர்ப்புறம் என வேறுபாடின்றி முழு மாநிலத்திற்கும் சேவை செய்யும் ஒரு பெரிய இயக்கமாக சப்ளைகோ பணியை துவக்கியது. தற்போது ஆயிரத்து அறுநூறு விற்பனை நிலையங்கள் உள்ளன. அத்தி யாவசியப் பொருட்களின் விற்பனை யைத் தவிர, மருந்து, பெட்ரோலியம், எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய துறைகளிலும் வணிகம் விரி வடைந்துள்ளது. கோவிட் நெருக்கடி யின் போது, ​​சப்ளைகோ மூலம் 12 கோடி  இலவச கிட்டுகள் (உணவுப் பொருட் களின் தொகுப்பு) மக்களுக்கு வழங்கப் பட்டன. சந்தை தலையீடு தவிர, நெல் கொள்முதல், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு, வீட்டு வாசலில் ரேசன்  விநியோகம், நிவாரண முகாம்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் மற்றும் உணவுப் பெட்டி கள் விநியோகம் ஆகியவை சப்ளைகோ  மூலம் செயல்படுத்தப் படுகின்றன. நுகர்வுப் பொருட்களுக்கு 5 முதல் 30 சதவிகிதம் வரையிலும், சபரி பிராண்ட்  பொருட்களுக்கு 10 முதல் 25 சதவிகிதம் வரையிலும், மருந்துகள் 13 முதல் 40 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு வரை, பொதுச் சந்தையில் உள்ள விலை அளவைப் புரிந்துகொண்டு அதிலிருந்து குறிப்பிட்ட சதவிகித மானியம் செலுத்தி  சப்ளைகோ பொருட்களை விற்றது. ஆனால், 2016 முதல் 2024 பிப்ரவரி வரை,  மாநில அரசின் முடிவின்படி, 13 அத்தி யாவசியப் பொருட்களின் விலை உயர வில்லை. பிப்ரவரி 2024 இல், அமைச்சர வைக் கூட்டத்தின் முடிவின்படி, அத்தியாவசியப் பொருட்களின் விலை பொதுச் சந்தையில் இருந்து 35 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு திருத்தப்பட்டது. எட்டு ஆண்டுகளாக அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்தாமல் விற்பனை செய்வதன் மூலம் சப்ளைகோவுக்கு பெரும் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.