பாஜக ஆளும் குஜராத் மாநில அகமதாபத்தில் உள்ள பல்கலைக்கழ கத்தில் 300க்கும் மேற்பட்ட வெளி நாட்டு மாணவர்கள் பயின்று வரு கின்றனர். இவர்கள் பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கி கல்வி பயின்று வரும் நிலையில், சனியன்று இரவு 10:30 மணி அளவில் உஸ்பெகிஸ் தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ் தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை யைச் சேர்ந்த மாணவர்கள் விடுதி வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தொழுகை நடை பெற்ற இடத்திற்குள் நுழைந்த 20க்கும் மேற்பட்ட இந்துத்துவா குண்டர்கள் இங்கு தொழுகை நடத்தக் கூடாது எனக் கூறி கற்களை வீசி தாக்கி யும், தொழுகையில் ஈடுபட்ட வெளி நாட்டு முஸ்லிம் மாணவர்களின் விடுதி அறைகள் மீது தாக்குதல் நடத்தியும், ஜெய்ஸ்ரீராம் கோஷங்களுடன் விடுதி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 வாகனங்களை சுக்குநூறாக நொறுக்கிவிட்டு ஓடினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மற்ற மாணவர்கள் லேசான காயம டைந்த நிலையில், தஜிகிஸ்தான் மற் றும் இலங்கையைச் சேர்ந்த மாண வர்கள் இருவர் படுகாயத்துடன் அக மதாபாத் அருகில் உள்ள எஸ்விசி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியது மாணவர்கள் இல்லை
அகமதாபாத் குஜராத் பல்க லைக்கழகத்தில் தாக்குதல் நடத்தி யவர்கள் இந்துத்துவா மாணவர்கள் அமைப்பான ஏபிவிபி மாணவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என தொடக்கத்தில் தகவல் வெளியாகி யது. ஆனால் தாக்குதல் நடத்திய வர்கள் வெளிப்பகுதியில் இருந்து வந்த பாஜக - ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய இந்துத்துவா கும்பல் என தகவல் வெளியாகியுள்ளது. சிசி டிவி ஆதாரம் மூலம் தாக்குதல் நடத் தியவர்கள் அடையாளம் காணப் பட்டு 25 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அகமதா பாத் நகர கூடுதல் காவல் ஆணையர் நீரஜ்குமார் பட் குஜார் தகவல் தெரி வித்துள்ளார்.
துணைவேந்தர் நீரஜா குப்தாவிற்கு தெரிந்துதான் தாக்குதலா?
குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர் பாக பல்கலைக்கழக துணைவேந் தரை ஊடகங்கள் தொடர்பு கொண் டன. ஆனால் தாக்குதல் சம்பவம் தொடர்பாக துணைவேந்தர் நீரஜா குப்தா எவ்வித விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார். போலீஸ் விசாரித்து வருகிறது. என்னிடம் எதுவும் கேட்கா தீர்கள் எனக் கூறி தாக்குதல் சம்ப வம் தொடர்பான விபரங்களை வெளி யிட மறுத்துவிட்டார். இதனால் துணைவேந்தர் நீரஜா குப்தாவிற்கு தெரிந்துதான் வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் சம்ப வம் அரங்கேறியதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.