அகமதாபாத், டிச. 12 குஜராத் மாநிலத்தின் 18-ஆவது முதல்வராக பூபேந்திர படேல் (60) திங்களன்று பதவியேற்றுக் கொண்டார். மேலும் இரண்டாவது முறையாக அவர் முதல்வரானார். காந்தி நகரில் அரசு புதிய தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் நடை பெற்ற இதற்கான விழாவில், பூபேந்திர படேலுக்கு, ஆளுநர் ஆச்சாரிய தேவ்ரத் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்வர் ஆதித்யநாத், தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.