states

img

முஸ்லீம் பெண்களின் கல்வியைப் பறிக்கும் கர்நாடக அரசின் ஆணையை ரத்து செய்க!

கர்நாடகாவில் பாஜக-வினரும் இந்துத்துவா சக்திகளும் முஸ்லீம் எதிர்ப்பு, பிளவுவாத நடவடிக் கைகளில் இறங்கி, முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணியும் வழக்கத்தை பிரச்சனை யாக மாற்றியுள்ளனர்.  ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லீம் மாணவிகள் கல்லூரி வளாகங்களுக்குள் நுழையும்போது அவர்களைத் தடுத்து நிறுத்திடும் காட்சிகள் கல்வி கற்க விரும்பும் முஸ்லீம் பெண்களைக் கற்க விடாமல் தடுத்திடும் அப்பட்டமான அநீதி யாகும். மாணவர்களின் உடையில் மத அடை யாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற பெயரில், முஸ்லீம் பெண்களின் கல்வி கற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அறிக்கைகளிலிருந்து, முஸ்லீம்கள் அவர்களின் மதம் சார்ந்த  அடையாளங்களுக்காகக் குறிவைத்துத்  தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்  என்பதும், இரண்டாம்தர பிரஜைகளாகக்  கருதப்படுவதும், அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள சம உரிமைகள் மறுக்கப்படுவதும் தெளிவாகத் தெரி கிறது.  மைசூர்-குடகு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரதாப் சிம்கா என்பவர் “நீங்கள் ஹிஜாப், பர்தா அணியமுடியும் என்றால், மதராசாக்களுக்குப் படிக்கச்  செல்லுங்கள்” என்று சற்றும் வெட்க மின்றி கூறியிருக்கிறார்.

கர்நாடகத்தை மதவெறிக் களமாக்க முயற்சி

கர்நாடக மாநிலத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒட்டு மொத்தமாகப் பார்க்காமல், ஹிஜாப் பிரச்சனையை மட்டும் தனித்துப் பார்த்திடக் கூடாது. 2019இல் காங்கிரஸ்-மதச் சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியைக் கவிழ்த்துவிட்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, மாநிலத்தில் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைத் திணித்திட  தொடர்ந்து முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. 2020இல் அனைத்து வகையான கால்நடைகளையும் இறைச் சிக்காக பயன்படுத்துவதற்கு எதிராகக்  கடுமையான சட்டம் ஒன்றை நிறை வேற்றியது. இந்தச்சட்டம் அடிப்படையில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்று. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி வர்த்த கத்தில் ஈடுபட்டிருக்கிறவர்கள். இதனைத்  தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு மதச் சுதந்திரத்திற்கான உரிமைப் பாதுகாப்பு (Protection of Right to Freedom of  Religion Bill 2021) என்னும் ஒரு சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது. இது,  கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான  ஒன்று என்ற பெயரில், கிறித்தவ சமூகத்தி னரையும், மதக் கலப்புத் திருமணங் களையும் குறிவைத்துத் தாக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்டதாகும். பல இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல்வேறு அமைப்புகள் உருவாக்கியுள்ள கண்காணிப்புக்குழுக்கள் பல்வேறு  மதங்களைச் சார்ந்த இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்து நட்புறவுடன்  பழகுவதைத் தாக்குவது என்பது அதிகரித் துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களில் இது  அதிகரித்திருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ள இதே கல்வித் துறைதான், மாநிலம் முழு தும் அனைத்துக் கல்லூரிகளிலும் சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டைக்  கொண்டாடும் விதத்தில் ‘சூரிய நமஸ் காரம்’ நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது. கல்வி கற்கவரும் முஸ்லீம் பெண்கள்  ஹிஜாப் அணியக்கூடாது என்னும் நடவ டிக்கைக்குப் பின்னால், முஸ்லீம்களை இரண்டாம் தர பிரஜைகளாக்குவதற்கான முயற்சி ஒளிந்திருக்கிறது. இது குடிமக்க ளில் ஒரு பிரிவினரின் அரசமைப்புச்சட்ட உரிமைகள் சம்பந்தப்பட்ட அடிப்படை  அம்சமாகும். பாதிப்புக்கு உள்ளான  மாணவிகளில் ஒருவர் உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ள வழக்கு, விசார ணையில் இருந்து வருகிறது. இதன்மீது  உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு தீர்மானித்திட இருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின்கீழ் சிறுபான்மை யினருக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தர வாதங்களின்படி, கர்நாடக அரசாங்கத் தின் பாகுபாடான ஆணை ரத்து செய்யப் பட வேண்டும்.

(பிப்ரவரி 9, 2022)
(தமிழில்: ச.வீரமணி)