states

img

கர்நாடக தேர்தல்: 9 மணி வரை 8.26% வாக்குகள் பதிவு

கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி 8.26% வாக்குகள் பதிவாகி உள்ளன.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை 9 மணி வரை 8.26% வாக்குகள் பதிவாகி உள்ளன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 5,31,33,054 வாக்காளர்களில் ஆண்கள் 2,67,28,053 பேரும், பெண்கள் 2,64,00,074 பேரும், திருநர் சமூகத்தினர் 4,927 பேரும், மாற்றுத் திறனாளிகள் 5,71,281 பேரும் உள்ளனர். 11,71,558 புதிய வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்.
அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு 58,545 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 263 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 2430 பேர் ஆண் வேட்பாளர்கள், 184 பேர் பெண் வேட்பாளர்கள்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணி 8.26% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 13.28% வாக்குகளும், குறைந்தபட்சமாக யாத்கிர் மாவட்டத்தில் 5.33% வாக்குகளும் பதிவாகியுள்ளன.