states

img

மீண்டும் மேகவெடிப்பு... உத்தரகண்டில் கனமழை....   

டேராடூன்
உத்தரகாண்ட் மாநிலத்தின் வடக்கு பகுதி மாவட்டமான சமோலி மலைப்பகுதியை ஒட்டி இருந்தது.   இப்பகுதியில் திங்களன்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாலங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.  

;