states

img

கனமழை: பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு

அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.

மழை காரணமாக பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை கவலையடையச் செய்துள்ளது.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் அளித்த தகவலின்படி, பிரம்மபுத்திரா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 33 ஆயிரம் குழந்தைகள் உள்பட 1.34 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காமரூப், கரீம்கஞ்ச், தேமாஜி, திப்ருகர், தின்சுகியா, லக்கிம்பூர் உள்பட ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

தொடர் கனமழை காரணமாகவே பிரம்மபுத்திரா நதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. நதியில் வெள்ளம் அதிகரித்து, அது மெல்ல மெல்ல சாலைகள், கிராமப் பகுதிகளைச் சூழ்ந்து கொண்டது. இதனால், மக்கள் பல கிராமங்களிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

;