states

img

உத்தரகண்டில் ரயிலை கவிழ்க்க சதி

மோடி பிரதமர் ஆன பின்பு ரயில்வே துறை மிக மோசமான அளவில் சீர ழிந்து வருகிறது. நிதி குறைப்பால் ரயில்  கள் பராமரிப்பின்றி இயங்கி வரும் நிலை யில், கடந்த 2014இல் ரயில் விபத்து இல்லாத மாதங்களே  இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் ரயி லில் பயணம் செய்யவே அஞ்சி வரு கின்றனர். ஏற்கெனவே தானாக ரயில் கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வரும்  நிலையில், பாஜக ஆளும் மாநிலங்க ளில் ரயில்களை கவிழ்க்க சதிகள் அரங்  கேறி வருகின்றன. 

இந்நிலையில், உத்தரகண்ட் மாநி லம் லக்சர் – ரூர்க்கி ரயில் பாதைக்கு உட்பட்ட கண்டோன்மென்ட் அருகே உள்ள புச்சாடி ரயில் பாதையில் ஞாயி றன்று காலை 7.45 மணியளவில் 3 கிலோ  எடையுள்ள காலி கேஸ் சிலிண்டர் ஒன்று  கிடந்தது. அப்பகுதி மக்கள் தண்டேரா ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்  ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து காலி கேஸ் சிலிண்டரை கைப்பற்றிய ரயில்வே போலீசார், கோட்வாலி போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் என்ஐஏ விசாரிக்காதா?
3 நாட்களுக்கு முன் தமிழ்நாட்டின் திரு வள்ளூர் அருகே கவரைப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பயணிகள் மோதியது.  இந்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்த நிலையில், பல ரயில் பெட்டிகள் எரிந்து  சேதமடைந்தன.

இந்த ரயில் விபத்தில் ஏதாவது சதி இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையில் ஈடு பட்டு வருகிறது. ஆனால் பாஜக ஆளும்  உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தி யப்பிரதேசம் மற்றும் பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலங்களில் நிகழும் ரயில் விபத்து மற்றும் ரயிலை கவிழ்க்க  சதி செய்தி தொடர்பாக என்ஐஏ விசா ரணை மேற்கொள்வது கிடையாது. தற்  போது உத்தரகண்டில் சிலிண்டர் வைத்து  ரயிலை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதி தொடர்பாகவும் என்ஐஏ மவுனம் காத்து வருகிறது. பாஜக அல்லாத எதிர்க்  கட்சி ஆளும் மாநிலங்களில் ஏஎன்ஐ உட னடியாக விசாரணைக்கு வருவதும், பாஜக ஆளும் மாநிலங்களில் ஏஎன்ஐ  விசாரணைக்கு செல்லாததும் சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது.