states

கைது செய்த அனைவரையும் விடுதலை செய்தது விவசாயிகளின் எச்சரிக்கைக்கு பணிந்த உ.பி. பாஜக அரசு!

லக்னோ, டிச. 5 - யமுனை விரைவுச் சாலை, நொய்டா மற்றும் கிரேட்டர்-நொய்டா வில் நடைபெற்று வரும் பல திட்டங்களுக்காக விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு கேட்டு, பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லம் மேற்கு பகுதியைச் சேர்ந்த விவ சாயிகள், புதனன்று நாடாளுமன்றம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட னர்.

இந்த நடைபயணத்தின் போது  நொய்டாவின் தலித் பிரேர்னாவில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பலரை, உத்தரப்பிரதேச பாஜக அரசு வீட்டுக்காவலில் வைத்தது. இந்நிலையில், விவசாயிகளை கைது செய்ததை கண்டித்து புதன் கிழமை உறையவைக்கும் பனியில் கிரேட்டர் - நொய்டாவின் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள ஜீரோ பாயிண்ட் பகுதியில் ஆயிரக் கணக்கான விவசாயிகள் மகா பஞ்சாயத்து மூலம் பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர்.

 சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தலைமையில் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ஹன்னன் முல்லா, துணை தலைவர் விஜூ கிருஷ்ணன், கிருஷ்ணபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த மகா பஞ்சாயத்தில், “கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்காவிட்டால் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், கிராம மக்களும் தில்லிக்குப் பேரணி யாக செல்வோம்” என்று தீர்மானம் நிறைவேற்றி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 விவசாயிகளின் எச்சரிக்கைக்கு பணிந்த உத்தரப்பிரதேச பாஜக அரசு கைது செய்யப்பட்ட விவசாயி களையும், வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட விவசாய சங்கத் தலைவர்களையும் வியாழக்கிழமை அன்று விடுதலை செய்தது.