முசாபர் நகர்:
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரியம்வதா தோமர் என்ற பெண் தலைவர்பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.கார்ப்பரேட்டுக்களுக்கு ஆதரவானவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவிலிருந்து விலகியிருக் கும் அவர், உத்தரப் பிரதேச மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
தனது விலகல் குறித்து, மாநில பாஜக தலைவா் ஸ்வதந்திர தேவ் சிங்குக்கு பிரியம்வதா கடிதம் எழுதியுள் ளார். அதில், ‘மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உள்ளன. முக்கியமாக, புதிய வேளாண் சட் டங்கள் விஷயத்தில் விவசாயிகளின் கவலைகளைத் தீர்ப்பதில் அக்கறைசெலுத்தாமல் உள்ன. விவசாயிகளின் போராட்டத்தை அரசு முற்றிலுமாக அலட்சியம் செய்து வருகிறது. எனவே,பாஜக அரசின் விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்தும் பிற பொறுப்புகளிலும் இருந்தும் விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.