உத்தரபிரததேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள லெவானா ஓட்டலில் திங்கள்கிழமை காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டடத்திற்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.