states

img

தெலுங்கானாவில் பெண் காவலர் ஆணவக் கொலை காதல் திருமணம் செய்ததற்காக வெட்டிக் கொன்ற சகோதரர்

தெலுங்கானா மாநிலம்  ரங்கா ரெட்டி மாவட்டம் ஹயத்நகர் காவல் நிலையத்தின் காவ லராக இருப்பவர் நாகமணி. இவர் இரண்டு வாரங்களு க்கு முன் பெற்றோர் களின் எதிர்ப்பை மீறி வேறு சாதியைச் சேர்ந்த தனது காத லன் ஸ்ரீகாந்த் என்பவ ருடன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு நாகமணியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாகமணி காவலர் என்பதால் உயர் அதிகாரிகள் அவரது குடும்பத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ராயபோலில் இருந்து மன்னே குடா நோக்கி இருசக்கர வாகனத்தில்  நாக மணி சென்று கொண்டிருந்தார். நாகமணி யின் இருசக்கர வாகனத்தை அவரது சகோதரர் பரமேஷ் காரை வைத்து இடித்து தள்ளியுள்ளார். நிலைதடுமாறி நாகமணி கீழே விழுந்தார். பின்னர் நாக மணியை பரமேஷ் கத்தியால் சரமாரி யாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம டைந்த நாகமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேறு சாதியை சேர்ந்த  ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டதற்காக நாகமணியை அவரது சகோதரர் பரமேஷ் கொன்றதாக போலீ சாரின் முதற்கட்ட விசாரணையில் செய்தி கள் வெளியாகி உள்ளது. காதல் திருமணம் செய்ததற்காக பெண் காவலரை அவரது குடும்பத்தினரே வெட்டிக் கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.