தெலுங்கானா அரசுப்பேருந்து விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் மிரியால குடா அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில், 70 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது அருகே வந்த டிப்பர் லாரி கவிழ்ந்தது. இதனால் டிப்பரில் இருந்த ஜல்லி மொத்தமும் பேருந்தில் விழுந்ததால் பேருந்து மொத்தமும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் சிக்கி 3 மாத குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர் 30க்கும் மேற்ப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விபத்துக்குறித்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
