india

img

அனில் அம்பானியின் ரூ.3,084 கோடி சொத்துக்கள் முடக்கம்.!

பணமோசடி வழக்கில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,084 கோடி மதிப்பிலான 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உட்பட பல குழும நிறுவனங்களால் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அனில் அம்பானிக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூலை 24 அன்று மும்பையில் ரிலையன்ஸ் குழுமங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் செயல்பட்டு வரும் 50 நிறுவனங்கள் மற்றும் 25 முக்கிய நபர்களிடம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறை அனில் அம்பானியிடம் நடத்திய விசாரணைக்கு பின், இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இந்த நிலையில், பணமோசடி வழக்கில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,084 கோடி மதிப்பிலான 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
மும்பையின் பாலி ஹில் பகுதியில் உள்ள 66 ஆண்டுகள் பழமையான அம்பானியின் வீடு உள்பட அவரது குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான பிற குடியிருப்புக் கட்டடங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.