states

img

ஈரத்துணிகளை காயவைத்தபோது மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி  

தெலுங்கானாவில் ஈரத்துணிகளை காயவைத்தபோது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருபவர் அகமது-பர்வீன் தம்பதியினர். இவர்களுக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் என்ற மகளும் இருந்தனர்.  

இந்நிலையில், வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால், உள்ளே சுவற்றில் கட்டப்பட்டிருந்த ஒரு உலோக கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

மின்சாரம் பாய்ந்து பர்வீர் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த அவரது கணவர் பர்வீனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் காப்பாற்ற சென்ற கணவர் அகமது மற்றும் அவர்களது மகன் அத்னான், மகள் மஹீம் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் 4 பேரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.