states

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை நிறுத்தக்கூடாது

சென்னை,ஜூலை 2 சென்னை-ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலை வரிசை  ஒலிபரப்பை நிறுத்தக்கூடாது என்று ஒன்றிய அரசை பாமக தலைவர் அன்புமணி  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில் அனைத்திந்திய வானொலியின் கொல் கத்தா வானொலியில் முதன்மை அலை வரிசை  ஜூன் 30-ஆம் நாள் நள்ளிரவுடன் மூட ப்பட்டிருக்கிறது.  கொல்கத்தா முதன்மை அலைவரிசையில் இதுவரை ஒலிபரப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரெயின்போ பண் பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் என்றும்,  ரெயின்போ பண்பலைவரிசை இனி செயல் படாது என்றும், அதில் மணிக்கு ஒரு முறை ஒலிபரப்பப்பட்டு வந்த செய்திகள் இனி ஒலிபரப்பாகாது என்றும் அறிவிக்கப்பட் டது.  இந்த மாற்றங்கள் மேற்கு வங்க  வானொலி நேயர்களிடம் பெரும் ஏமாற் றத்தை  ஏற்படுத்தி உள்ளன. இதைவிட அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவை எந்த நேர மும்  நிறுத்தப்படக்கூடும்; அதில் ஒலி பரப்பான நிகழ்ச்சிகள் ரெயின்போ பண்ப லையில் ஒலிபரப்படும்; பண்பலை நிகழ்ச்சி கள் இனி ஒலிபரப்பாகாது என்பது தான். சென்னை-ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலை வரிசை  ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும். தனித்து வமான அதன் நிகழ்ச்சிகளைக் கேட்ப தற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர். தமிழ்ப் பண்பாடு, கலைகள் ஆகிய வற்றின் தூதராகவும் இந்த அலைவரிசை திகழ்கிறது.  இதுவரை 300 கி.மீ சுற்றளவில் கேட்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சிகளை ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்பும் போது, அதிகபட்சமாக 50 கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும் தான் கேட்க முடியும். இதனால் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத் திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும் என்று அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். பிரசார்பாரதியின் தலைமைப் பொறுப்பில் வானொலி, தொலைக்காட்சி குறித்த அனுபவம் இல்லாத  இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்படு வது தான் இந்த நிலைக்கு காரணம்  என்றும் அவர் சாடியுள்ளார்.