புதுச்சேரி கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கத்தின் சார்பில் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் "Software Freedom Day" கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக "FOSSCON' 24" தொழில்நுட்ப முதல் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டின் நோக்கமாக அனைவருக்கும் தொழில்நுட்பம், கட்டற்ற மற்றும் ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் அதன் பயன்பாட்டை வலியுறுத்தி நடைபெற்றது.
மாநாட்டை கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கத்தின் செயலாளர் கமலவேலன் தலைமை தாங்கினார். பாகூர் சட்டமன்ற உறுப்பினர் இரா. செந்தில் குமார் துவக்கி வைத்தார், அரசு ஊழியர் சம்மேளனத்தின் கௌரவ தலைவர் பிரமேதாசன் மற்றும் கட்டற்ற மென்பொருள் வன்பொருள் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் பிரசன்னா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர்.
இதில் அமைப்பின் தலைவர் ராகுல்காந்த, பொருளாளர் அர்ஜுன், நிர்வாகிகள் கணேஷ், நூருதீன், தினேஷ், மணிராஜ், தாமோதரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் தலைவர் பிரசன்னா வெங்கடேஷ் பிரச்சாரத்தில் பங்கேற்றார்.