states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

டாலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியுடன் பிரதமரின் கண்ணியமும், அவரது அலுவலகத்தின் நேர்த்தியும் வீழ்ச்சியடைகின்றது.   பிரதமர் மோடி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 100 ரூபாயை தொடுவதை உறுதி செய்வது  போல தெரிகிறது என்றார்.

ஜம்மு- காஷ்மீர் கல்வித் துறை, பூஞ்ச் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் இன் அகில பாரத வித்யார்த்தி பரிசத் சார்பிலான மூவர்ணக்  கொடி பேரணியில் பங்கேற்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது இஸ்லாமிய எதிர்ப்பு மதவெறியை இயல்பான செயலாக மாற்றுகிறது. கல்வியை மதவெறி பிரச்சாரக் கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாமல் படுகொலை செய்ய பாஜக தில்லி காவல்துறையுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி வருகிறது. முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது தில்லி காவல்துறை செயலற்றதாக இருந்தது.  

உத்தரப்பிரதேசத்தின் பொருளாதாரம் அடுத்த 4 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலராக மாறும் என மீண்டும் சொல்லி வருகின்றது  உ.பி பாஜக அரசு. பாஜக வினால் 1 டிரில்லியன் பொய்களை மட்டுமே உருவாக்க முடியும், வேறு எதையும் அவர்களால் உருவாக்க முடியாது.

ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோக னுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப் படும்  மாநிலங்களவை எம்பி விஜயசாய் ரெட்டி தனது எம்பி பதவியை வெள்ளியன்று ராஜினாமா செய்தார். மேலும் அரசியலில் இருந்து விலகுவதாக வும் எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்து வர் பாலியல் வன்கொலை வழக்கில் குற்ற வாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரும் மேல்முறை யீட்டு மனுவை நீதிமன்றம் முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தி உள்ளது. 

குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் இருந்து ரூ.107 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். போதைக்காக பயன்படுத்தப்படும் அல்பிரசோலம் மருந் துகள் தயாரிக்கப்படுவதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப் படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஊழியர்களுக்கு அல்வா கொடுத்துள்ளார் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தை முன்னிட்டு  வழக்கமான முறையில் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு  வழங்கினார். பிப்.1 இல்  பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட உள்ளது.