சென்னை,செப்.17- சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கடந்த மூன்று நான்கு நாட்களாவே 100 டிகிரியை யும் தாண்டி கோடை காலம் போல் சுட்டெரித்து வரு கிறது. இயல்பை விட 4 செல்சியஸ் வெப்பம் பல மாவட்டங்க ளில் அதி கரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். வெப்பம் வருவதற்கான காரணம் குறித்து வானிலை அதிகாரி கீதா கூறுகையில்,“ செப்டம்பர் மாதத்தில் வெப்பம் அதிகரிப்பது என்பது புதி தானது அல்ல. எப்போதாவது இது போன்று நிகழ்வது உண்டு”என்றார். வடமாநிலங்களில் மாறி மாறி காற்ற ழுத்தம் உருவாகி வருவதால் கடலில் உள்ள ஈரப்பதத்தை முழுவதும் இழுத்து சென்று விட்டது. கடல் காற்றுக்கு பதில் நிலப்பகுதியில் இருந்து காற்று வீசுகிறது. சுழற்சி காரணமாக நிலப்பரப்பில் இருந்து காற்று வீசுகிறது. அதனால் ஈரப்பதம் குறைந்தால். தென் மேற்கில் இருந்து காற்று வந்த பிறகு தான் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும். தற்போதைய நிலவரப்படி 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதன் பின்னர் குறையும் என்றாலும் அதற்கிடையே புதிய காற்றழுத்தம் உருவாகும் பட்சத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.