states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கொரோனா பெருந்தொற்று மனிதர்களின் இதயங்களை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பது பற்றிய புதிய முடிவுகளை ஆஸ்திரேலிய மருத்துவ விஞ்ஞானிகள் தருகிறார்கள். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, காய்ச்சலின்போது எடுக்கப்படும் மாதிரிகளில் மரபணுக்களைத் தாக்குவது தெரிய வருவதில்லை. இதயச் சதைகளைப் பரிசோதிக்கும்போதுதான் இது தெரிய வந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினோ ஃபசோவில் அரசு கவிழ்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் தொலைக்காட்சியில் ராணுவ உடையில் தோன்றிய 15 ராணுவ வீரர்கள், அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகள் அனைத்திற்கும் தடை போடப்பட்டுள்ளதாக அறிவித்தனர். அவர்களுக்குத் தலைமை தாங்கும் கேப்டன் இப்ராகிம் டிராவ்ரே, “நாட்டின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் மீட்கவே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளோம்” என்றார்.

ஈரான் மற்றும் சீனாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரெய்சி கருத்து தெரிவித்துள்ளார். பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை இரு நாடுகளுமே விரும்புவதில்லை என்று கூறியுள்ள ரெய்சி, “இன்றைய தினம் பெரும் சவால்களை உலகம் சந்தித்து வருகிறது. இந்நிலையில் சுயமாக இயங்கக்கூடிய நாடுகளுக்குள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.