“கர்நாடகம் முற்போக்கானதாக இருப்பதால் தண்டிக்க நினை க்க வேண்டாம்” என மோடி அரசுக்கு அம்மாநில முதல்வரும், காங்கி ரஸ் மூத்த தலைவரு மான சித்தராமையா எச்சரிக்கை விடுத் துள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற 69ஆவது மாநில உதய தினத்தை முன்னிட்டு மக்களிடம் உரையாற்றிய சித்தராமையா மேலும் கூறுகையில்,“கர்நாடகாவில் 200க்கும் மேற்பட்ட மொழி பேசும் மக்கள் உள்ளனர். இங்கு எந்த மொழி பேசினாலும், எந்த சாதி அல்லது மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் கன்னடர்களே. ஒன்றிய அரசுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் க்கு மேல் வருவாயை கர்நாடகம் அளித்து வருகிறது. 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்தாலும், வெறும் 55,000 கோடி முதல் 60,000 கோடி வரை மட்டுமே கர்நாடகம் பெறுகிறது. அதா வது மொத்த பங்களிப்பில் 14 முதல் 15 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசு கொ டுக்கிறது. இதனை கன்னடர்கள் முத லில் தெரிந்து கொள்ள வேண்டும். கூட் டாட்சி அமைப்பின் கீழ், கர்நாடகா ஒரு முற்போக்கான மாநிலம். அதற்காக ஒன்றிய அரசு தண்டிக்க நினைக்கக் கூடாது. அநீதி இழைக்கக் கூடாது. இது நல்லதல்ல” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.