states

img

12 மணி நேர வேலைக்கு திமுக தொழிற்சங்கமும் எதிர்ப்பு

வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதாவிற்கு திமுகவின் தொழிற்சங்கம் தொ.மு.ச எதிர்ப்பு.
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளன்று 2023-ஆம் ஆண்டு 8 மணி நேர வெலையை 12 மணி நேரமாக அதிகரித்து தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி தமிழ்நாட்டு அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியது. 
இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மர்றும் தொழிற்ச்சங்கள் தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதனிடையே இன்று மாலை 3 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ,தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் தி.மு.க வின் தொழிற்சங்கமான தொ.மு.ச தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.