தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு ஒன்றிய அரசின் நிதி இன்னும் ஒதுக்கப்படாததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்
தேசிய கல்விக் கொள்கைக்குத் தலைவணங்க மறுத்ததற்காகக் கல்வி மற்றும் சமூகநலத் திட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பது, அதே நேரத்தில் இலக்குகளை நிறைவேற்றாதவர்களுக்குத் தாராளமாக வெகுமதி அளிக்கப்படுகிறது. இதுதான் ஒன்றிய அரசின் கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் திட்டமா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.