states

பிரெஞ்சு துணை தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

புதுச்சேரி, அக்.10- புதுச்சேரி கடற்கரைச் சாலை தலைமை செயலகம் அருகில்  உள்ள  மரைன் வீதியில் பிரெஞ்சு நாட்டு துணைத் தூதரகம்உள்ளது.  இங்கு பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற வர்களுக்கான சான்று சரி பார்ப்பு மற்றும் அந்நாட்டு க்குச் செல்வதற்கான அனு மதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. துணைத் தூதரகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்  தூத ரகத்தின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டுமிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.மிரட்டல் தொடர்பாக பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடி குண்டு நிபுணர்கள், வெடி குண்டு கண்டறியும் பிரிவி னர், மோப்ப நாய்கள் மற்றும் தீயணைப்பு துறை யினர் தூதரகத்தில் சோத னையில் ஈடுபட தயாரா னார்கள். அப்போது தூத ரகத்தினர் சென்னையில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் அனுமதி அளித்த பிறகே காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்படும் என்றனர்.  உடனே காவல்துறையி னர்,  அனுமதிக்கு காத்தி ருந்தால் விபரீதம் ஏதும் நிகழும் நிலையை விளக்கி னர். அதையடுத்தே தூதரக அதிகாரிகள் காவல் துறையினரை சோதனை யில் ஈடுபட  அனுமதித்த னர். அதனைத் தொடர்ந்து தூதரகத்தில் உள்ள  அறை களில் அறை வெடிகுண்டு சோதனை நடைபெற்றது.  சோதனையில் ஏதும் சிக்கவில்லை. வெடி குண்டு மிரட்டல் புரளி என பின்னர் தெரியவந்தது.