போலியான செய்திகளை பரப்புவதற்கு சமூக ஊடகங்களை பாஜக ஆயுதமாக பயன்படுத்துகிறது. பாஜகவினர் ஊடுருவல், மக்கள்தொகை அதிகரிப்பு என மக்களை பிரிக்க பார்க்கிறார்கள். இந்த ஊடுருவலுக்கு யார் பொறுப்பு? பாஜகவினர் இந்து - முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
மோடி - அமித் ஷாவின் உண்மை முகங்கள் இதுதான். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் துபாயில் அமித்ஷா மகன் ஜெய்ஷா ஷேக்குகளுடன் தொழில் செய்து பணத்தை கோடிகளில் சம்பாதிக்கிறார். இந்திய அளவில் மட்டுமின்றி மோடி - அமித்ஷாவின் போலித்தனம் உலகளவில் பிரபலமாக உள்ளது.
ஜார்க்கண்டுக்கு இது ஒன்றும் புதிதில்லை. மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர்களின் ஊழியர்களின் வீடுகளில் அடிக்கடி வருமான வரிச்சோதனைகள் நடத்தப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் மூலமாக பாஜக ஜார்க்கண்டில் கால்பதிக்க நினைக்கிறது.
நாட்டு மக்கள் எது உண்மை என்று அறிய ஊடகங்களை பார்க்கிறார்கள். ஆனால் உண்மைகளை மக்களிடமிருந்து மறைத்து புதைக்க அவர்களின் முதலாளிகளை பார்க்கிறது ஊடகங்கள்.