இந்தியாவில் ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது..
மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரெயில் சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.