states

img

அதானி குழுமத்தின் கடன் மோசடி

மும்பை, செப். 9 - அதானி குழுமம் பல்வேறு நிறுவனங்களை கைப்பற்றியதன் மூலம் பொதுத்துறை வங்கி களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வங்கி ஊழி யர் இயக்கம் வெளி யிட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான முக் கிய அம்சங்கள் வருமாறு:

அதானி குழுமத்தின்  10 நிறுவனங்களுக்கு பொதுத் துறை வங்கிகள் வழங்கிய ரூ.61,832 கோடி கடனில், வெறும் ரூ.15,977 கோடி மட்டுமே திரும்பப் பெறப் பட்டுள்ளது.  இதன் மூலம் வங்கிகளுக்கு 74% அள விற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.எச்டிஐஎல்(HDIL), ரேடி யஸ் எஸ்டேட்ஸ் (Radius  Estates) ஆகிய நிறுவனங் களின் கடன்களில் 96% வங்கி களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்ஸார் பவர்( Essar Power), லான்கோ பவர் (Lanco Amarkantak Power) போன்ற பெரிய நிறுவனங்களின் கடன்களி லும் 70% க்கும் அதிகமான இழப்பு உள்ளது.

நெருக்கடியில் உள்ள நிறுவனம்    வாங்கியவர்     ஒப்புக்கொண்ட உரிமைக் கோரல் மதிப்பு
(ரூ. கோடியில்)    வாங்கிய விலை
(ரூ.கோடியில்)    வங்கி களுக்கான இழப்பு
1. HDIL (திட்டம் BKC)    அதானி பிராப்பர்ட்டீஸ்    7,795    285    96%
2. ரேடியஸ் எஸ்டேட்ஸ் & டெவலப்பர்ஸ்    அதானி குட்ஹோம்ஸ்    1,700    76    96%
3. நேஷனல் ரேயான் கார்ப்பரேஷன்     அதானி பிராப்பர்ட்டீஸ்    1,175     160    86%
4. எஸ்ஸார் பவர் எம்.பி. லிமிடெட்      அதானி பவர் லிமிடெட்    12,013    2,500    79%
5. திகி போர்ட் லிமிடெட்      அதானி போர்ட் &
SEZ லிமிடெட்    3,075     705    77%
6. லான்கோ அமர்கந்தக் பவர்     அதானி பவர்    15,190    4,101    73%
7. கோஸ்டல் என்ர்ஜென் லிமிடெட்       அதானி பவர் லிமிடெட்    12,300     3,500    72%
8. ஆதித்யா எஸ்டேட்ஸ்     அதானி பிராப்பர்ட்டீஸ்    593     265    55%
9. காரைக்கால் போர்ட்      அதானி போர்ட் & SEZ லிமிடெட்    2,959    1,485    43%
10. கோர்பா வெஸ்ட் பவர் கம்பெனி    அதானி பவர் லிமிடெட்    5,032    2,900    42%
    மொத்தம்     61,832    15,977    74%

 

மொத்தம் ரூ.45,855 கோடி அளவிற்கு வங்கி களுக்கு இழப்பு ஏற்பட்டுள் ளது. “பிரதமரின் விருப்ப தொழில் குழுமம் இந்த 10 நிறுவனங்களை கைப்பற்றியதன் மூலம், பொதுத்துறை வங்கி களுக்கு பெரும் இழப்பு ஏற் பட்டுள்ளது” மட்டுமல்ல; அதானி குழுமம் மேலும் ஏராளமான நிறுவனங்களை விழுங்கி வருகிறது; அதன்  மூலம் எத்தனை ஆயிரம்  கோடி பொதுப்பணம் கபளீ கரம் செய்யப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள் ளது. மோடியின் கூட்டுக்களவாணியாக உள்ள அதானியின் இந்த  விவகாரம் குறித்து விரி வான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும், வங்கி களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு யார் பொறுப்பு என்பது கண்ட றியப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.