மகாராஷ்டிராவில் உள்ள சத்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில், கோரேகாவ் பகுதியை சேர்ந்த காஜல் விகாஸ் ககுர்தியா (வயது 27) என்ற கர்ப்பிணி மூச்சுத்திணறல் மற்றும் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவரின் கருப்பையில் 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை பாதுகாப்பாகப் பிறந்தன. தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
27 வயதான காஜலுக்கு, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள், இரண்டாவது பிரசவத்தில் 1 குழந்தை, தற்போது மூன்றாவது பிரசவத்தில் 4 குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான சம்பவமாகும்.