states

img

உ.பி., முதல்வருக்கு கொலை மிரட்டல்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை  போக்குவரத்து கட்டுப்பாட்டு  பிரிவுக்கு வந்த மிரட்டல் செல் போன் அழைப்பில்,”உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் அடுத்த 10 நாட்க ளுக்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், பாபா  சித்திக்கை கொன்றது போல கொன்று  விடுவோம்” என மிரட்டல் விடுக்கப்பட்  டது. இதனையெடுத்து மும்பை போலீ சார் உத்தரப்பிரதேச காவல்துறையுடன் தகவலை பகிர்ந்து கொண்டனர். தொட ர்ந்து முதல்வர் யோகிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மும்பை போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில், முதல்வர் ஆதித்ய நாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்  24 வயது பெண் என்பது தெரியவர, அவரை ஞாயிற்றுக்கிழமை மதியம் மும்பை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண் சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவர் என தகவல் வெளி யாகியுள்ளது.