states

img

பழங்குடி மக்களுக்கு நிலத்தை உரிமையாக்கிய பினராயி அரசு.... 5 ஆண்டுகளில் 4,768 குடும்பங்களுக்கு 3,869 ஏக்கர்.... வன உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் ஒப்படைப்பு....

திருவனந்தபுரம்:
கேரள இடது ஜனநாயக முன்னணிஅரசு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்,4 ஆயிரத்து 768 பழங்குடி குடும்பங்களுக்கு, 3 ஆயிரத்து 869.73 ஏக்கர் நிலத்தைச் சொந்தமாக்கியுள்ளது. வன உரிமைச் சட்டத்தின் கீழ், இடுக்கியில் மட்டும் 560 பேருக்கு நிலஉரிமை ஆவணங்கள் வழங்கியுள் ளது. இதேபோல பாலக்காடு மாவட்டத்தில் 262 பழங்குடி குடும்பங்களுக்கும், வயநாட்டில் 216 குடும்பங்களுக் கும், எர்ணாகுளத்தில் 224 குடும்பங்களுக்கும், பத்தனம்திட்டாவில் 96 குடும்பங்களுக்கும், கோட்டயத்தில் 24 குடும்பங்களுக்கும், திருச்சூரில் 10 குடும் பங்களுக்கும், திருவனந்தபுரத்தில் 3 பழங்குடி குடும்பங்களுக்கும் நிலங்கள்வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வன உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலத்தின் மொத்த பரப்பளவு 1796.96 ஏக்கர் ஆகும்.

நிலத்தை வாங்கி ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் காசர்கோடு மாவட்டத்தில் 144 பழங்குடி குடும்பங்களுக்கு நிலம்வழங்கப்பட்டுள்ளது. இதே வகைப்பாட்டின் கீழ் கோட்டயத்தில் 36 குடும்பங்களுக்கும், பத்தனம்திட்டாவில் 28 குடும் பங்களுக்கும், பாலக்காட்டில் 26 குடும்பங்களுக்கும், எர்ணாகுளத்தில் 11 குடும்பங்களுக்கும், இடுக்கியில் 9 குடும்பங்களுக்கும், கல்பேட்டாவில் 7 குடும்பங்கள், மணந்தவாடியில் 7 குடும்பங்கள், திருச்சூர் 4 குடும்பங்கள், ஆலப்புழா மாவட்டத்தில் ஒரு குடும்பத்திற்கும் நிலம் வாங்கி ஒப்படைக்கப்பட் டுள்ளது. நில வங்கி திட்டத்தின் கீழ், மலப்புரத்தில் 34 நபர்களுக்கும், கோழிக்கோட் டில் ஒருவருக்கும் நிலம் வழங்கப்பட் டுள்ளது. எர்ணாகுளத்தில் 99 பேர், பாலக்காட்டில் 87 பேர் வருவாய் துறையின் மூலம் நில உரிமை பெற்றுள்ளனர். நில வங்கி திட்டத்தின் கீழ் விநியோகிக்க 46.07 ஏக்கர் நிலத்தை அரசு வாங்கியது.ஒதுக்கப்பட்ட வன நிலம் என்ற வகையில் 2708 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ்பாலக்காடு மாவட்டத்தில் 1845 குடும்பங்கள், வயநாட்டில் 679 குடும்பங் கள், காசர்கோட்டில் 150 குடும்பங்கள், மலப்புரத்தில் 34 குடும்பங்கள் நிலம் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 171 குடும்பங்களுக்கு 20.47 ஏக்கர் நிலம் வழங்கப் பட்டுள்ளது. தற்போது, பட்டியல் பழங்குடியினரில் 10 ஆயிரத்து 944 பேர் நிலமற்றோராக இருப்பதாகவும் அரசு கணக்கிட் டுள்ளது.

நிலம் கேட்டவர்களுக்கு  வீடும் கிடைத்தது... 
கேரளத்தில் காசர்கோடு மாவட்டம் காஞ்ஞாம்காடு, புல்லூர் நம்பியாறு அருகே சுசீலா கோபாலன் நகர் வீட்டுவசதி காலனியில் உள்ள பதினாறு குடும்பங்கள் வீட்டுமனை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், அவர்களுக்கு நிலப் பட்டாக்களுடன் ‘லைப்’ திட்டத்தின் கீழ் வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. 12 குடும்பங்களின் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இந்தக் காலனியிலும் பெரும்பகுதியினர் பட்டியல் பழங்குடி குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.