சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு புகழாரம் சூட்டி, சுதந்திர தினத்தையும், சுதந்திர போராட்டத்தையும் பிரதமர் மோடி அவமதித்துள்ளார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆஅர்.எஸ்.எஸ்) என்ற ஒரு அமைப்பு உருவானதாகவும். அந்த அமைப்பின் 100 ஆண்டுக்கால தேச சேவை என்பது பெருமைக்குரியது மற்றும் புகழ்பெற்றது என்றும் பேசியிருந்தார்.
மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சுதந்திர தினத்தை அவமதித்த பிரதமர் மோடி அவமதித்துள்ளார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு புகழாரம் சூட்டி, சுதந்திர தினத்தையும், சுதந்திர போராட்டத்தையும் பிரதமர் மோடி அவமதித்துள்ளார்.
வெறுப்பு, வகுப்புவாதம் மற்றும் கலவரங்களின் அழுக்குச் சுமையை" ஆர்.எஸ்.எஸ் சுமந்து வருகிறது. மோடியின் இந்த பேச்சு வரலாற்றை மறுக்கும் செயல் என்றும், பிளவுப் அரசியலின் "விஷமிகுந்த வரலாறு" கொண்ட ஆர்எஸ்எஸ்-ஐ இது போன்ற அபத்தமான பேச்சுகளால் தூய்மைப்படுத்த முடியாது.
மனித அன்பு மற்றும் பரஸ்பர உறவின் வரலாற்றை புதைத்து, அதை வெறுப்பால் மாற்றும் எந்தவொரு நடவடிக்கையையும் நாட்டு மக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.