ஆலப்புழா:
எஸ்எப்ஐ ஊழியர் அபிமன்யு-வின் கொலையில் தொடர்பில்லை என்று ஆர்எஸ்எஸ் கூறிவரும் நிலையில், குற்றவாளி சஜ்ஜித் ஆர்எஸ்எஸ் கிளை பயிற்சி முகாமில் கலந்துகொண்ட புகைப்படம் கேரள சமூகவலைதளங்களில் வெளியாகிஆர்எஸ்எஸ்-ஸின் கோர கொலை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
ஊடகங்களும் சங்-பரிவார் அமைப்புகளும் ஆர்எஸ்எஸ்-ஸை கொலை வழக்கிலிருந்து காப்பாற்ற முயன்ற நிலையில், சஜ்ஜித்-தின் ‘ஷாகா’ புகைப்படம் அவர்களுக்கு பேரடியாக அமைந்துள்ளது.சிபிஎம் குடும்பத்தைச் சேர்ந்தவர் அபிமன்யு. அதாவது அவரது தந்தை அம்பிளிகுமார் கட்சிக்காரர். அண்ணன் அனந்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னணிஊழியர். அந்த வழியில் 15 வயதுசிறுவனான அபிமன்யு-வும் பள்ளியில் இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.ஆனால், இந்த குடும்பத்தை ஆர்எஸ்எஸ்-காரர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தனர். வீட்டை அடித்துநொறுக்கியதுடன், வாகனத்தையும் அழித்தனர். வீட்டு மீதான தாக்குதல் தொடர்பாக காவல்துறையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில்தான், விஷு திருவிழா நாளான புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் வள்ளிக்குந்நம் படயணிவட்டம் கோவிலில் அபிமன்யு குறிவைக்கப்பட்டார். அபிமன்யு-வின் அடிவயிற்றின் இடது பக்கத்தில், நான்கு அங்குல விட்டம் கொண்ட கத்தியால் குத்தப்பட்டார்.
அன்று மாலை 4 மணிக்கே கொலைக்கான திட்டத்தில் இறங்கியஆர்எஸ்எஸ் கும்பல், கோயிலைச் சுற்றியுள்ள கடைகளுக்கு பின்னால் கொடிய ஆயுதங்களை மறைத்து வைத்ததை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.கொலைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், கோயில் வளாகத்தில் ஏதேனும் வன்முறை நடந்திருக்கிறதா? என்று முன்கூட்டியே சிலர் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு பேசியதும் நடந்துள்ளது. ஆர்எஸ்எஸ் கும்பலின் வன்முறைகளில் தொடர்புடையவர்கள் என்றுகூறி மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிலர், கொலை நடப்பதற்கு முந்தைய நாட்களில் இப்பகுதியில் வலம் வந்துள்ளனர்.தற்போது காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட கும்பலால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக அபிமன்யு கொலைக்கு ஆர்எஸ்எஸ்-காரர்களே காரணம்என்று அவரது தந்தை அம்பிளி குமார், தாத்தா திவாகரன் ஆகியோர்பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.தங்கள் குடும்பத்திற்கு ஆர்எஸ்எஸ்-சிடமிருந்து இதற்கு முன்பு வந்த அச்சுறுத்தல்களையும் பட்டியலிட்டனர். எனது பேரன் எஸ்எப்ஐ ஊழியர் என்பதே, அவனைஆர்எஸ்எஸ்-காரர்கள் கொலைசெய்வதற்குக் காரணம் என்று அபிமன்யு-வின் தாத்தா திவாகரன் கூறியிருந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்போ, இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது. ஆனால், முதன்மைக் குற்றவாளியாக அறியப்படும் சஜ்ஜித், ஆர்எஸ்எஸ் கிளை பயிற்சி முகாமில் கலந்துகொண்ட புகைப்படம் அபிமன்யு கொலைக்கு ஆர்எஸ்எஸ்-சே காரணம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.