கர்நாடக மாநிலத்தில் ஜூன் 16 முதல் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட அனைத்து பைக் டேக்சிகளுக்கும் ஜூன் 16 முதல் தடை விதித்து மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா அரசு, மோட்டார் வாகன சட்டத்தில் உரியச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.