ஜார்க்கண்ட் மாநிலத்தில் (நவம்பர் 13 மற்றும் 20) இரண்டு கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வெளியிட் டார். அப்போது பிரச்சார மேடை யில் அவர் கூறுகையில், “ஜார்க் கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அதேநேரத் தில் பழங்குடியினருக்கு அச்சட்டத் தில் விலக்கு அளிக்கப்படும்” என இரட்டை ஆதாயத்தில் கூறினார்.
ஹேமந்த் சோரன் விளாசல்
அமித் ஷாவின் பேச்சுக்குப் பதி லடி கொடுக்கும் விதமாக ஞாயி றன்று மாலை நடைபெற்ற பிரச்சா ரக் கூட்டத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலை வரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பேசுகையில், “ஜார்க்கண்டில் பொதுசிவில் சட் டம் (UCC) மற்றும் தேசிய குடி மக்கள் பதிவேடு (NRC) போன்ற சிக்கலான சட்டங்களை அமல் படுத்துவோம் என ஒன்றிய உள் துறை அமைச்சர் கூறியுள்ளார். அமித் ஷா அவர்களே, உங்கள் இரு காதுகளையும் திறந்து நன்றா கக் கேளுங்கள். ஜார்க்கண்ட் மாநி லத்தில் சிஎன்டி/எஸ்பிடி (CNT/ SPT) சட்டங்கள் மட்டுமே பழங்குடி யினரின் நாகரீகங்களையும் கலாச் சார மரபுகளையும் பாதுகாக்க முடி யும். வேறு எந்தச் சட்டமும் ஜார்க் கண்ட் பழங்குடியின மக்களுக்கு நன்மை தராது. ஆனால் தேர்த லுக்காக ஜார்க்கண்டின் அடை யாளத்துடன் ஏன் விளையாட விரும்புகிறீர்கள்? ஜார்க்கண்டில் பொதுசிவில் சட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அனுமதிக்கவும் விடமாட்டோம்” என அமித் ஷாவின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்தார்.
பாஜக ஆட்சியின் போது பழங்குடியினர் பட்டினியால் இறந்தனர்
மேலும், “ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியின் போது 11 லட்சம் ரேஷன் கார்டுகள் மற்றும் 3 லட்சம் ஓய்வூ தியங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பழங்குடியினர், தலித் மக்கள் பட்டினியால் கொத்து கொத்தாகச் செத்து மடிந்தனர். இத னால் தற்போதைய ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி ஆட்சி யின் போது பழங்குடியினர், தலித் மக்களுக்காக ரேஷன் கார்டுகள் மற்றும் ஓய்வூதியங்களுக்குப் பல் வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. அதேபோல வர விருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந் தால் பொது விநியோகத் திட்டத் தின் (பிடிஎஸ்) மூலம் 5 கிலோ வுக்குப் பதிலாக மாதம் 7 கிலோ ரேஷன் அரிசி வழங்கப்படும். அதே போல ஓய்வூதியத் தொகையை யும் உயர்த்துவோம்” என ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
பாஜகவைத் துரத்துவோம்!
டாப் டிரெண்டில் ஜேஎம்எம் கட்சியின் போஸ்டர்
சட்டமன்றத் தேர்தலுக்காக ஜேஎம்எம் கட்சி சமூக வலைதளப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் அறிக்கை விப ரம், மீம்ஸ், பாஜகவின் வகுப்புவாதக் கொடுஞ்செயல், “இந்தியா” கூட்டணித் தலைவர்களின் பிரச்சார நிகழ்வுகள் போன் றவற்றைத் டுவிட்டர் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஜேஎம்எம் ஐடி விங் குழு பிரச்சாரப் போஸ் டர்களாகவும் வீடியோக் களாகவும் பதிவிட்டு வரு கிறது. இதில் நவம்பர் 2 அன்று ஜேஎம்எம் கட்சி சார்பில் வெளி யான பிரச்சாரப் போஸ்டர் டாப் டிரெண்டில் வைரலாகி வருகிறது. அந்தப் போஸ்டரில் பழங்குடியின மக்கள் குளத்தில் இருக்கும் தாமரையை நோக்கி வில் அம்பு எய்வதுபோல் உள்ளது. “வில் அம்பு பாஜகவின் சின்னமான தாமரையைத் தகர்ப்பது போல, பாஜக வை ஜார்க்கண்டில் நுழைய விடாமல் தடுப்போம்” எனப் போஸ்ட ருடன் கருத்துக்களும் வைரலாகி வருகின்றன.