ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதி யில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஞாயி றன்று அம்மாநில தலைநகர் ராஞ்சி யில் பிரதமர் மோடி 6 வந்தே பாரத் ரயில் உட்பட ரூ.650 கோடி மதிப் பில் புதிய ரயில் திட்டங்களை தொடங்கி வைத்து அரசு நிகழ்வை தேர்தல் பிரச்சார நிகழ்வாக தொடங்கினார்.
அதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது போன்று ஜார்க்கண்டிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சை கட்டவிழ்த்து விட்டு, வன்முறை பதற்றத்தை தூண்டியுள்ளார்.
ராஞ்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,”ஜார்க்கண்ட்டில் ஊடுருவல்கள் அதிகமாக உள் ளன. குறிப்பாக வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா ஊடுருவல்கா ரர்களுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இணைந்து செயல்பட்டு வருகிறது. வாக்கு வங்கிக்காக ஊடு ருவல்காரர்களை ஜார்க்கண்ட்டுக் குள் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அனுமதிக்கிறது. இந்த ஊடுருவல்காரர்கள் ஜார்க்கண்ட் டின் சந்தால் பர்கானாஸ் மற்றும் கோல்ஹான் பகுதிகளில் வசிக்கும் நிலையில், இவர்கள் மாநிலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள னர். மேலும் சந்தால் பர்கானாஸ் மற்றும் கோல்ஹான் பகுதிகளில் பழங்குடியினரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. ஊடுருவல்காரர் கள் கிராம பஞ்சாயத்தை கூட கட்டுக் குள் எடுக்கின்றனர். அதேபோல் இந்த மாநிலத்தின் மகள்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். நிலத்தை பறிக்கின்றனர்” என தான் வகிக்கும் பிரதமர் பதவியை மறந்து மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மறைமுகப் பேச்சு
வங்கதேச நாட்டின் முஸ்லிம் மக்களும், மியான்மர் நாட்டின் ரோஹிங்கியா இன முஸ்லிம் மக்க ளும் தங்கள் நாட்டின் வன்முறை மற்றும் இதர சம்பவங்களால் தப்பிப் பிழைத்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். வங்கதேச நாட்டின் முஸ்லிம் மக்கள் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும், ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளி ட்ட மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். பிரதமர் மோடி ஜார்க்கண்டில் முஸ்லிம்கள் என்று வெளிப்படையாக குறிப்பி டாமல் வங்கதேசம், ரோஹிங்கியா ஊடுருவல்காரர்கள் என மறைமுக மாக குறிப்பிட்டும், முஸ்லிம் மக்க ளின் கூட்டாளியாக காங்கிரஸ் - ஜேஎம்எம் கட்சிகள் உள்ளன என்றும் வெறுப்புப் பேச்சை பற்ற வைத்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
மோடியின் பேச்சை திரித்து சமாளிப்பு வேலையில் ஈடுபட்ட “கோடி மீடியா”
ஜார்க்கண்டில் பிரதமர் மோடி முஸ்லிம் மக்களை மறை முகமாக பேசியது கண்டனத்திற்குள்ளான நிலையில், சமூகவலைத்தளங்களில் எதிர்ப்புக் குரல் வலுத்தது. இதனால் பதற்றம் அடைந்த பாஜக, தங்கள் ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள் மூலம் ஜார்க்கண்ட்டில் வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா மக்களின் ஊடுருவல்கள் அதிகமாகி வருவதை கண்டித்தும், அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகத்தை விமர்சித்ததாகவும் செய்திகளை வெளியிட்டு, பிரதமர் மோடி பேசியதை திசை திருப்பியுள்ளன.