சண்டிகர் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு அக்டோபர் 5 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில், இந்த தேர்த லுக்கான வேட்புமனுத் தாக்கல் வியாழனன்று நிறைவு பெற்றது
இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நாளான வியாழனன்று காலை, கடைசி நேரத்தில் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தொ குதி உடன்பாடு கண்டு போட்டியிடு வதாக இரு கட்சிகளுக்கும் இடை யே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 89 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும், ஒரு தொகுதி (பிவானி) சிபிஎம் கட்சிக்கும் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில், பிவானி தொகுதி சிபிஎம் வேட்பாளராக ஓம் பிரகாஷ் வியாழனன்று மாலை வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
ஓம் பிரகாஷுக்கு இடது சாரிகள் - சமாஜ்வாதி ஆதரவு
ஹரியானா சட்டமன்ற தேர்த லில் சிபிஎம் போலவே இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் சமாஜ் வாதி ஆகிய 2 கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டி யிட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவ டைந்த நிலையில், சிபிஐ, சமாஜ் வாதி ஆகிய கட்சிகள் பிவானி உட் பட காங்கிரஸ் போட்டியிடும் சில தொகுதிகளில் ஆதரவு அளிப்ப தாக அறிவித்துள்ளன.
கடைசி நேரத்தில் கூட்டணி: பாஜக அதிர்ச்சி
ஹரியானாவில் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற மக்களவை தேர்தலில் போன்று காங்கிரஸ் - ஆம் ஆத்மி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - சமாஜ்வாதி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகள் இணைந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தின. காங்கி ரஸ் கட்சி தொகுதி பிரிப்பில் பிடிவா தம் பிடித்த நிலையில், 10 தொகு திகளை கேட்ட ஆம் ஆத்மிக்கு 5க்கு மேல் தர முடியாது என கைவிரித் தது. இதனால் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
அதே போல சிபிஎம் - சிபிஐ ஆகிய இடதுசாரிகளும் ஒரு குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் தனித்துப் போட்டியிடுவதாக அறி வித்தன. சமாஜ்வாதி கட்சியோ எந்த வித அறிவிப்பும் வெளியிடாமல் அமைதியாக இருந்தது.
தொகுதி பங்கீடு பிரச்சனை யால் ஹரியானாவில் “இந்தியா” கூட்டணி கட்சிகள் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்தது தங்க ளுக்கு சாதகமாக அமையும் என பாஜக மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.
ஆனால் கடைசி நேரத்தில் பிவானி தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வருமாறு கட்சி சிபிஎம்-க்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் பிவானி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. அடுத்த சில நிமி டங்களில் சிபிஎம் வேட்பாளர் ஓம் பிரகாஷுக்கும், காங்கிரஸ் கூட்ட ணிக்கும் (குறிப்பிட்ட தொகுதிக ளில்) ஆதரவு அளிப்பதாக சிபிஐ அறிவித்தது. தொடர்ந்து சமாஜ் வாதி கட்சியும் காங்கிரஸ் - சிபிஎம் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியது. தொகுதி பங்கீடு பிரச்ச னையால் ஆம் ஆத்மி மட்டுமே “இந்தியா” கூட்டணியை விட்டு பிரிந்துள்ள நிலையில், மற்ற கட்சி கள் பாஜகவை அகற்ற ஒன்றிணைந் துள்ளன. இது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா சட்டமன்ற தேர்தல் களத்தில் காங்கிரஸ் - சிபிஎம் ஆகிய 2 கட்சிகள் கூட்டணியாக வும், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தும் போட்டியிடு கின்றன. இதுபோக சின்னசிறு கட்சி களான ஜேஜேபி - ஆசாத் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும், பகு ஜன் சமாஜ் - இந்திய தேசிய லோக் தளம் - ஹரியானா லோகித் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலை எதிர்கொள்ளும் நிலை யில், இந்த தேர்தலில் காங்கிரஸ் - சிபிஎம் கூட்டணி ஆட்சியை கைப் பற்றும் என லோக் போல் நிறுவனம் உட்பட பல்வேறு கருத்துக்கணிப்பு கள் தகவல் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.