பாஜக ஆளும் ஹரியானாவின் பரீதாபாத்தில் பசுக்களை கடத்திச் செல்வதாகக் கூறி, பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவனான ஆர்யன் மிஸ்ராவை பசுக் குண்டர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பசுக் குண்டர்களை கைது செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரீதாபாத் மாவட்டக் குழு போராட்டம் நடத்தியது.