states

img

ராஜஸ்தானில் பழங்குடியின மக்களின் நிலங்களை பறிக்கும் குஜராத் மாபியாக்கள்

ராஜஸ்தானில் பழங்குடியின மக்களின் நிலங்களை பறிக்கும் குஜராத் மாபியாக்கள்

ராஜஸ்தான் மாநிலம் குஜராத் எல்லைப் பகுதியில் உள்ளது பிச்சிவடா. இந்த பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடமிருந்து குஜராத் நில மாபியாக்கள் தொடர்ச்சி யாக நிலத்தை அபகரித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரம் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மூலம் ரிசார்ட் கட்டுவதற்கான ஏற்பாடு களையும் குஜராத் நில மாபியா கும்பல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பழங்குடியின மக்க ளின் நில அபகரிப்பு மற்றும் ரிசார்ட் கட்டுவதற்கு எதிராக பிச்சிவடா தாலுகா புனர்வடா கிராமத்தில் பழங்குடியின மக்களின் நல அமைப்புக் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் ஆதிவாசி அதிகார் மஞ்ச் மாவட்டத் தலைவர் கவுதம் தாமோர், அகில இந்திய விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பாபுரம் பரண்டா ஆகியோர் உரை யாற்றினர். கூட்டத்தின் முடிவில் பிப்ரவரி 24ஆம் தேதி பிச்சிவடா காவல்நிலை யத்தில் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் நில புரோக்கர்கள் உதவியுடன் மாபி யாக்கள் தொடர்ந்து பழங்குடியினரை மிரட்டி, அடித்து துன்புறுத்தி வரு கின்றனர்.