“கர்ம ஸ்ரீ” திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயர் மேற்கு வங்க அரசு அறிவிப்பு
நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் மோடி அரசு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு “விபி ஜி ராம் ஜி” என்று மதச்சாயலில் பெயரை மாற்றி யுள்ளது. மோடி அரசின் இந்த அடா வடிக்கு நாடு முழுவதும் கடும் கண்ட னங்கள் கிளம்பியுள்ளன. மகாத்மா காந்தி மீண்டும் ஒரு முறை ஆர்எஸ்எஸ் - பாஜக வால் கொல்லப்பட்டுள்ளார் என “இந் தியா” கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி யுள்ளன. இந்நிலையில், தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, மேற்கு வங்க அரசு “கர்ம ஸ்ரீ” திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில்,”தேசியத் தலைவர்களுக்குச் சில கட்சிகள் மரி யாதை செலுத்தத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம். தேசத் தந்தையின் பெயரையே நீக்குவது மிகுந்த அவமான மாக இருக்கிறது. அதனால் மாநில வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான “கர்ம ஸ்ரீ” திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டியுள்ளோம்” என அவர் கூறினார். “கர்ம ஸ்ரீ” திட்டம்? 2022-ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்திற்கான ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சுமார் 58 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 6,919 கோடி ரூபாய் நிலுவை யில் உள்ளது. ஒன்றிய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024 ஆம் ஆண்டு “கர்ம ஸ்ரீ” திட்டத்தைத் தொடங்கி யது. இது கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
