உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சர்ச்சை பேச்சு
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் ஜனாதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் உத்தர விட்டு தீர்ப்பளித்துள்ளதற்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளார். இதுதொடர்பாக தில்லி யில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் அவர் பேசுகையில், “நாட்டின் ஒரு குடிமகனாக, பொறுப்புமிக்க பதவியில் இருக்கிற நான், சட்டத்தின் ஆட்சியை நாம் நீர்த்துப் போகச் செய்கிறோமா? என் கிற கேள்வியை எழுப்பு கிறோம். மக்களாகிய நாம் என்கிற அரசியல் சாசனத் துக்கு நாம் பதில் சொல்ல வேண்டாமா? சட்டம் சார்ந்த நடவடிக்கைகளை நாடா ளுமன்றம்தான் எடுக்க வேண்டும். நாட்டில் இருப் பது உச்சநீதிமன்றம்தானா? அல்லது சூப்பர் பவர் கொண்ட நாடாளுமன்றமா? நாட்டின் அரசியல் சாசனத் தைப் பாதுகாக்கக் கூடிய அதிகாரம் படைத்தவர் ஜனா திபதிதான். தற்போது ஜனா திபதிக்கே நீதிபதிகள் உத்தர விடுகின்றனர். அதெப்படி ஜனாதி பதிக்கு உச்சநீதிமன்றமா னது உத்தரவிட முடியும்? ஜனாதிபதி பதவி என்பது மிக மிக உயர்ந்தது. மதிப் புக்குரியது; இந்த நாட்டின் சட்டங்கள் தங்களுக்குப் பொருந்தாது என நீதிபதிகள் நினைக்கின்றனர். இந்த நாடு எதனை நோக்கிச் செல்கி றது? இந்த நாட்டில் பிரதமர் மீது கூட வழக்கு பதிவு செய்யலாம்; ஆனால் நீதிபதி கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது? ஜனாதிபதியை உச்சநீதிமன்றம் வழிநடத்து கிற சூழ்நிலையை நாம் அனு மதிக்க முடியாது. உச்சநீதி மன்றத்துக்கான சிறப்பு அதி காரம் 142-ஐ, ஜனநாயகத் துக்கு எதிரான அணு ஏவு கணையாகவே பயன் படுத்துகின்றனர்” என ஜக தீப் தன்கர் விமர்சித்தார்.