டிரம்ப்பை மோடி எதிர்க்காத காரணம் அதானி மீதான ஊழல் விசாரணை தான் !
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை விமர்சித்தால் மோடி மூலமாக அவரது நண்பர்களான அம்பானி, அதானி, ரஷ்ய நிறுவனங்களுக்கு இடையே உள்ள நிதி சார்ந்த தொடர்புகள் அம்பலமாகிவிடும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளர். ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என இந்தியாவை அமெ ரிக்கா மிரட்டி வருகிறது. இதற்கு கடுமையான எதிர்வினையாற்று வதற்கு பதிலாக ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகள் மிரட்டலு க்கு அடிபணியும் வகையில் உள்ளன. கடந்த ஜூலை மாதம் ரஷ்யா விடம் இருந்து இந்தியாவின் எந்த அரசு துறை நிறுவனமும் ஒரு வாரம் கச்சா எண்ணெய் வாங்க வில்லை. இது கடுமையான விமர்ச னத்திற்குள்ளானது. ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்த கத்தை முன்வைத்து தானே நிறுத்தி னேன் என டிரம்ப் பேசிய போது, அதற்கு எதிர்வினையாற்றாத மோடி இந்த விவகாரத்திலும் அமைதியாகவே இருக்கிறார். இந்நிலையில் “இந்தியர்களே புரிந்துகொள்ளுங்கள், டிரம்ப் தொ டர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரத மர் மோடியால் அவரை எதிர்த்து நிற்க முடியாது. இதற்கு காரணம், அதானி மீது அமெரிக்கா நடத்தும் ஊழல் விசாரணைதான். டிரம்ப்பை பிரதமர் மோடி விமர்சித் தால் அவர் மூலமாக அம்பானி, அதானி, மற்றும் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் அதிலுள்ள நிதி தொடர்புகள் அம்பலமாகி விடும் என்பதே மோடிக்கு ஒரு அச்சுறுத்த லாகும். மோடியின் கைகள் கட்டப் பட்டுள்ளன.” என விமர்சித் துள்ளார்.