இடது ஜனநாயக மாதிரியும், கேரள வளர்ச்சியும்
தொழிலாளர் வர்க்கத்தின் புகழ்பெற்ற தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒடிசா மாநில முன்னாள் செயலாளருமான மறைந்த சிவாஜி பட்நாயக்கின் (3 முறை எம்.பி.,யாக இருந்தவர்) நினைவேந்தல் கூட்டம் ஆகஸ்ட் 10ஆம் தேதி புவனேஸ்வரம் (ஒடிசா தலைநகர்) அருகே நடைபெற்றது. இந்நிகழ்வில் “இடது ஜனநாயக மாதிரியும், கேரள வளர்ச்சியும்” என்ற தலைப்பில் கேரளாவின் நிதியமைச்சரும் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினருமான கே.என்.பாலகோபால் உரையாற்றினார்.