தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக்கூடாதாம்!
பவன் கல்யாண் பேச்சு
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நடைபெற்ற ஜனசேனா கட்சி யின் 12ஆவது ஆண்டு விழாவில் அக்கட்சியின் தலைவரும், துணை முதலமைச்சருமான பவன் கல் யாண்,”இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொ ருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக்கூடாது. ஆனால் நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப் படுகிறது. சனாதன தர்மம் எனது ரத்தத்தில் கலந்துள்ளது. அதை யாருக்கும் நிரூ பிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை பேசினார்.