states

சபாநாயகரின் தாமதம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் தெலுங்கானா எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சபாநாயகரின் தாமதம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் தெலுங்கானா எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் 10 எம்எல்ஏக்கள், கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் இந்த விவகாரம் தொ டர்பாக தெலுங்கானா சட்டமன்ற சபாநாய கர் ஜி.எல்லையா கட்சி தாவல் தடை சட்டம் தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளி யிடவில்லை; நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.டி.ராமராவ் உச்சநீதிமன்றத்தில் 2024 ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலை மை நீதிபதி பி.ஆர்.கவாய் தலையிலான அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின்பு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,”பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவிய விவகாரம் தொடர்பாக அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை விவகாரத்தை 3 மாதத்துக்குள் தெலுங்கானா சபாநாயகர் முடிவு செய்ய வேண்டும். இந்த தகுதி நீக்க நடவடிக்கை விவகாரத்தில் ஏதேனும் எம்எல்ஏக்கள் இழுத்தடிக்கும் நோக்கில் நடந்தால், சபாநாயகர் உடனடியாக முடிவு  எடுக்கலாம். மேலும் தகுதி நீக்க விவகா ரத்தில் நீதிமன்றங்களில் ஏற்படும் தாம தத்தை தவிர்ப்பதற்காகவே தகுதி நீக்க நட வடிக்கைகளை சபாநாயகர் முடிவு செய்ய அவரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது.  கட்சி தாவல் என்பது தேசிய அளவில் பேசப்படும் விவகாரமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது ஜனநாய கத்தை சீர்குலைக்கும். குறிப்பாக சபாநாய கர் 10ஆவது அட்டவணையின் கீழ் ஒரு தீர்ப்பளிக்கும் அதிகாரியாக மட்டுமே செயல்படுகிறார். அரசியலமைப்பு சட்ட விலக்குரிமை வழங்கப்படவில்லை. அதே போன்று சபாநாயகர்கள் கட்சித்தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கா மல் காலவரம்பின்றி செய்யும் காலதாம தம் என்பது, இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தை உருவாக்கும். எனவே கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் தற்போதைய வழிமுறையை நாடாளுமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.