states

img

எஸ்பிஐ வங்கியில்  ரூ.20 கோடி கொள்ளை

எஸ்பிஐ வங்கியில்  ரூ.20 கோடி கொள்ளை

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளை உள்ளது. செவ் வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் நுழைந்தது. வங்கி பணி நேரம் முடிந்த தால் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளைக் கும்பல், அங்குள்ள ஊழியர்களைக் கட்டிப்போட்டு ரூ. 20 கோடிக்கும் அதிக மான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். வங்கி மேலா ளரின் புகாரின் அடிப்படையில் இதுதொ டர்பாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரி வித்தனர். கர்நாடகாவில் எஸ்பிஐ வங்கி யில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.